நீண்ட நாட்களாக எழுத நினைத்த ஒரு விஷயம். ஏனோ இன்று தான் என் சிந்தனைக்கு, இல்லை இல்லை, ஆற்றாமைக்கு எழுத்துருவம் தர முடிந்தது. சினிமா பாடல்களில் ஆகட்டும் கவிதைகளில் ஆகட்டும் பெண்களையும் பெண்களின் இடை, மார்பு, புட்டம் பற்றியே ஸ்லாகித்து எழுதுகிறார்கள். உலக மலர்கள் பறித்து இரண்டு பந்துகள் அமைத்து பெண்ணை சமைத்து விட்டான், ஒரு கோடி பூக்கள் கொண்டு ஜோடி பூக்கள் செய்தானோ, வட்டம் பற்றி படித்தேன் உன் நெஞ்சின் மேலே என அடுக்கி கொண்டே செல்லலாம்... (நாமும் கூட உருளை பற்றி ஆணுறுப்பில் படிக்கலாமே!) ஏன் ஆண்களில் அழகானவர்களே இல்லையா அல்லது இந்த வர்ணனை எழுதும் ஆண்களுக்கு தங்கள் இனத்தை பற்றி தாழ்வு மனப்பான்மையா? அல்லது கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று தங்கள் வக்கிர ஆசைகளை வார்த்தைகளில் தீர்த்து கொள்கிறார்களா? புரியவில்லை.... ஒருவரும் ஆண்களின் மீசை, கிருதா, ஆண்குறி பற்றியெல்லாம் எழுதுவதே இல்லையே? ஏன், இந்திய நாரிமணிகள் அதையெல்லாம் ரசிக்க மாட்டார்கள் என்ற குருட்டு நம்பிக்கையா? அப்பாஸ் ஐயும் அஜித் ஐயும் பார்க்க இன்னும் வீட்டுக்கு தெரியாமல் கிராமத்தில் இருந்து வரும் சிறுமிகள் ஏராளம்... எத்தனையோ urban பெண்மணிகள் ஹ்ரிதிக் ரோஷன், டிராவிட், ஜோஹ்ன்னி தேப்ப், டி காப்ரியோ போன்றவர்களின் படங்களை Oh my Adonis என ரசித்து கொண்டு screensaver ஆக வைக்கிறார்களே... அதென்னவோ அத்தனை ஓரவஞ்சனை இந்த "கவிஞர்களுக்கு" ......